Friday, December 24, 2010

நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை!


கொழும்பு: நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சேவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை.

இலங்கை வெளியுறவுத் துறை இணையமைச்சர் நாமல் பெரேர, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள அதிபர் ராம்பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முன்பு கூறியிருந்தார். தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்தாராம். ஆனால் அதையும் மீறி செய்தி கசிந்துவிட்டது
.

Tuesday, December 14, 2010

ஜெக‌‌‌த் க‌ஸ்ப‌ர் ‌வீ‌டுக‌ளி‌ல் ‌சி.‌பி.ஐ அ‌திரடி சோதனை


2‌ஜி அலை‌க்க‌ற்றை முறைகேடு தொட‌ர்பாக பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்த ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா‌வி‌ன் சகோத‌ரி, ந‌ண்ப‌‌‌ர் ‌வீடுக‌ளிலு‌ம், த‌மி‌ழ் மைய‌ம் அமை‌ப்பா‌ள‌ர் ஜெக‌த் க‌ஸ்ப‌ர் ‌அலுவலக‌‌த்‌திலு‌ம் சி.‌பி.ஐ அ‌‌திகா‌ரிக‌ள் அ‌திரடி சோதனை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை மை‌யிலா‌ப்பூ‌ரி‌ல் உ‌ள்ள ஜெக‌த் க‌ஸ்ப‌ர் அலுவலக‌த்த‌ி‌ல் ‌சி.‌பி.ஐ அ‌‌திகா‌ரிக‌ள் இ‌‌ன்று காலை 10 ம‌ணி முத‌ல் இ‌ந்த சோதனையை நட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

மேலு‌ம் பெர‌ம்பலூ‌ரி‌ல் உ‌ள்ள ராசா‌வி‌ன் ந‌ண்ப‌ர் ‌சு‌ப்புடு எ‌ன்ற சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் ‌வீ‌ட்டிலு‌ம் ‌‌சி‌.பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் சோதனை நட‌த்‌‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இதேபோ‌ன்று ‌திரு‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ள ராசா‌வி‌ன் சகோத‌ரி ‌விஜ‌யாம்மா‌‌ள் ‌வீ‌ட்டிலு‌ம் ‌‌சி.‌பி.ஐ அ‌திகா‌‌ரிக‌ள் 5 பே‌ர் சோதனை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

இத‌னிடையே பெர‌ம்பலூ‌ரி‌ல் உ‌ள்ள ராசா‌வி‌ன் ‌வீ‌ட்டிலு‌ம் ‌சி.‌பி.ஐ அ‌திகா‌‌ரிக‌ள் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌வதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.