2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ராசாவின் சகோதரி, நண்பர் வீடுகளிலும், தமிழ் மையம் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மையிலாப்பூரில் உள்ள ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை 10 மணி முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
மேலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் நண்பர் சுப்புடு என்ற சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சியில் உள்ள ராசாவின் சகோதரி விஜயாம்மாள் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூரில் உள்ள ராசாவின் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment