Friday, August 21, 2009

புயலும், சீமானின் கோபமும்!


கையாலாகாத தமிழ் சமூகம், தலைவர்கள், ஊமையாகிப்போன உணர்வாளர்கள் எல்லார் மீதும் தனக்குள்ள கோபத்தை திரைவடிவில் மீண்டும் காட்ட வருகிறார் சீமான்.



இந்தப் படத்துக்கு 'கோபம்' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இயக்குகிறார் சீமான். சீமானின் கோபம் என்றுதான் பதிவு செய்திருக்கிறார்களாம்.

நாயகனாக நடிக்கவிருப்பவர் சீமானின் விருப்பத்துக்குரிய மாதவன். ஆனால் இந்தக் கதைக்கு இன்னும் சாக்லேட் பாயாகவே இருந்தால் ஒத்துவராது தம்பி... சீக்கிரம் கெட்டப்பை மாத்துங்க. உடல் மொழி இன்னும் திருத்தமாக இருக்கணும் என்று சீமான் அன்புக்கட்டளை போட, கோபக்கார தம்பிக்குரிய தோற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இப்போதே இறங்கி விட்டாராம் மாதவன்.

இதற்கிடையே ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கத் தயாராகி விட்டார் சீமான். படத்தின் பெயர் புயல். தயாரிப்பவர் மாயாண்டி குடும்பத்தாரை எடுத்த செல்வகுமார்.

சீமானின் கோபம், புயலைக் கிளப்பட்டும்...!

0 comments:

Post a Comment