Wednesday, September 2, 2009

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி ஆனார் லத்திகா சரண்

சென்னை : கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்த லத்திகா சரண் பயிற்சி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில்,

மாநில நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி லத்திகா சரணுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்றுள்ளார்.

அதேபோல் மாநில தலைமையக கூடுதல் டிஜிபி போலோநாத்தும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த டிஜிபி என்.பாலச்சந்திரன் தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.சேகர் மாநில நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐஜி ஆர்சி குடவாலா மாநில குற்றப்பிரிவு விசேஷ புலனாய்வு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். மாநில நிர்வாக பிரிவு ஐஜி ஆசிஷ் பெங்ரா வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு ஏற்பார்.


5 உதவி சூப்பிரண்ட்கள் மாற்றம்...

உதவி போலீஸ் சூப்பிரண்ட் சரவணன், அறந்தாங்கிக்கும், சேவியர் தனராஜ், செங்கல்பட்டு சப் டிவிசனுக்கும், அனில்குமார் கிரி, தூத்துக்குடிக்கும், பிரவேஷ்குமார், பரமக்குடி சப் டிவிசனுக்கும், காளிராஜ் மகேஷ்குமார், தஞ்சாவூர் சப் டிவிசனுக்கும் உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment