Friday, December 24, 2010
நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை!
கொழும்பு: நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சேவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை.
இலங்கை வெளியுறவுத் துறை இணையமைச்சர் நாமல் பெரேர, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள அதிபர் ராம்பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முன்பு கூறியிருந்தார். தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்தாராம். ஆனால் அதையும் மீறி செய்தி கசிந்துவிட்டது.
Labels:
இலங்கை
Tuesday, December 14, 2010
ஜெகத் கஸ்பர் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ராசாவின் சகோதரி, நண்பர் வீடுகளிலும், தமிழ் மையம் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மையிலாப்பூரில் உள்ள ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை 10 மணி முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
மேலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் நண்பர் சுப்புடு என்ற சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சியில் உள்ள ராசாவின் சகோதரி விஜயாம்மாள் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூரில் உள்ள ராசாவின் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மையிலாப்பூரில் உள்ள ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை 10 மணி முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
மேலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் நண்பர் சுப்புடு என்ற சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சியில் உள்ள ராசாவின் சகோதரி விஜயாம்மாள் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூரில் உள்ள ராசாவின் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Labels:
C.B.I,
ஜெகத் கஸ்பர்
நக்கீரன் இணையாசிரியர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
நக்கீரன் வார பத்திரிகை இணையாசிரியர் காமராஜ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்றுகாலை முதல் சோதனை மேற்கெண்டுவருகின்றனர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாகமுன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வீடு, அலுவலகம், அவரதுஉறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் சி.பி.ஐஅதிகாரிகள் அண்மையில் அதிரடி சோதனைநடத்தியது.
இந்நிலையில் நக்கீரன் வார பத்திரிகை இணையாசிரியர் காமராஜ் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை முதல்சோதனை மேற்கெண்டு வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் என்பதால் காமராஜ் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Labels:
C.B.I,
நக்கீரன்,
ராசா
Sunday, December 12, 2010
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை வெறியர்கள் தாக்குதல்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படைக் காடையர்கள் மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மீனவர்களை அடித்து உதைத்தும், படகுகளை சேதப்படுத்தியும் அனுப்பியுள்ளது சிங்கள வெறிப்படை.
685 படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சிங்களப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை அடித்து உதைத்தனர். பின்னர் படகுகளையும் சேதப்படுத்தி விட்டு எச்சரிக்கை விடுத்து திரும்பிச் சென்றனர்.
போகும்போது மீனவர்கள் வைத்திதருந்த மீன் பிடி வலை, செல்போன்களையும் சிங்கள காடையர் கூட்டம் பறித்துச் சென்றது.
Labels:
மீனவர்
Saturday, December 11, 2010
கனடாவில் திருக்குறள் பெயரால் பதவி ஏற்ற தமிழ்ப் பெண்!
டொரன்டோ: கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார். அதைவிட சிறப்பு, திருக்குறளின் பெயரில் அவர் பதவி ஏற்றுக் கொண்டதுதான்!
கனடாவின் மர்கம் (Markham area 4) பகுதியில் பொது பள்ளி வாரியத்துக்கான 2010 தேர்தலில் போட்டியிட்டார் ஜுனிதா நாதன். இவர் கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்.
இந்தத் தேர்தலில் 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற அவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் தமிழரின் பொதுமறை எனப் புகழப்படும் திருக்குறள் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
அவருடன் பதவிஏற்ற மற்றவர்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர்.
"பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் வாழ்வின் நெறிகளை சிறப்பாக சொல்கிறது. கல்வியின் பெருமைகளையும், நீதியையும் இத்தனை சிறப்பாக வேறு எந்த நூலும் சொன்னதில்லை" என்றார் ஜுனிதா நாதன்.
Labels:
கனடா,
தமிழ்ப்பெண்